மதமா??? மனிதனா???


மதம் என்பது ஒரு அருமையான படைப்பாகும். இன்றைக்கு ஏற்படும் மத மற்றும் இன சண்டைகள், மதங்கள் உருவான உன்னதமான காரணத்தை அழித்து விட்டன. மதம் எதற்காக படைக்கப் பட்டது, யாரால் படைக்கப் பட்டது என்பதற்கு அப்பாற்பட்டு, வியூகங்களை புறந்தள்ளி எதற்காக பின்பற்றப்பட்டது என்று நாம் ஆராய்ந்தால் அதற்கு ஒரு நல்ல விடை கிடைக்கும்.

ஒரு குழந்தை நல்ல குணங்களுடனும், ஒழுக்கத்துடனும் வளர பெற்றோர் தேவை படுகிறார்கள். ஒரு மாணவன் கல்வியிலும் வாழ்க்கை நெறிகளிலும் சிறந்து விழங்க அவனுக்கு ஒரு குரு தேவை படுகிறார். ஆனால் ஒரு மனிதன் நன்றாக வளர்ந்து சுயமாக வாழ்க்கை பாதையினை அடையும் போது அவனுக்கு மற்றவருடைய அறிவுரையும் போதனைகளும் எரிச்சலூட்டுகின்றன. அங்கு தான் மதம் தன் கடமையைச் செய்கிறது. நமக்கு மேல் வலிமை படைத்தவன் ஒருவன் இருக்கிறான், அவன் நம்மை எப்போதும் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்ற நம்பிக்கையும், பயமும் தான் ஒரு மனிதனை நேர் வழியிலும், பிறரை நேசித்து வாழவும் வழி செய்கிறது. கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கை தான் ஒரு மனிதன் தோற்கும் போது கூட துவண்டு விடாமல் பார்த்துக்கொள்கிறது. எனவே மதம் என்பது ஒரு மனிதனை ஒழுக்கத்துடனும் நம்பிக்கையுடனும் வாழ வழி செய்கிறது.

அக்காலத்தில் மக்கள் ஒவ்வொரு ஊராக குடி பெயர்ந்து சென்ற பின் அவர்களுக்கு உலகின் மற்ற பகுதியுடன் உண்டான பிணைப்பு அற்றுப்போனது. எனவே அவர்களுக்கு அவரவர்  வாழும் இடத்திற்கேற்ற ஒரு வாழ்க்கை தர்மமும் வாழ்வு முறையும் தேவைப்பட்டது. எனவே ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையான வாழ்க்கை தர்மம் இயற்றப்பட்டது. அதற்கு மதம் என்னும் பெயரும் வைக்கப்பட்டது. ஒவ்வொரு மதத்தினரும், கடவுள் என்று ஒருவர் நம்மை விட வலிமை படைத்தவராகவும், நமக்கெல்லாம் ஆசானாகவும், நாம் செய்யும் தவறுகளுக்கு தண்டிபவனாகவும் இருக்கிறார் என்ற நம்பிக்கையை ஒவ்வொருவர் மனத்திலும் ஆழமாக பதித்துவிட்டனர். அப்போது தான் ஒரு கேள்வி எழுந்தது கடவுள் என்பது யார் அவர் ஏன் நம்மை தண்டிக்க வேண்டும் அவருக்கு நம் மீது என்ன உரிமை இருக்கிறது என்ற கேள்வி எழுந்தது. அதற்கு ஒரு சமாதானமும் வழங்கப்பட்டது. அது அவர் தான் நம்மை படைத்தவர் எனவே அவருக்கு நம் மீது அனைத்து உரிமையும் இருக்கிறது என்பது. இந்த நம்பிக்கை இருந்த வரையில் மக்களுக்குலான நட்பு, அன்பு, மற்றும் நன்னெறிகள் சிறந்து இருந்தது.

மனிதன் ஆசை பட ஆரம்பித்தான். விஞ்ஞானத்தை வளர்த்தான். விளைவு மற்ற நாட்டின் மக்கள் தொடர்பு அவனுக்கு கிடைத்தது. அவன் வந்து பார்த்த மற்ற மக்களின் வாழ்வு முறை வேறு பட்டது. உடனே அவர்களையும் தன் மதத்திற்கு மாற்ற முயற்சித்தான். தன் மதத்தை விட்டு தர முடியாது என்று அடுத்தவனும் கூற. அங்கு ஆரம்பித்தது மதவெறி மற்றும் மத சண்டை. இப்போது சொல்லுங்கள் குற்றம் மனிதன் மீதா மதத்தின் மீதா?
மனிதருள் ஏற்பட்ட அடுத்த குழப்பம் இதுதான். மதம் என்பது நம்பிக்கை. ஆனால் கலாசாரம் என்பது அறிவியல். அக்கால மக்கள் நம்மை விட அறிவியலில் சிறந்து விழங்கினர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அப்போது வாழ்ந்த மக்களுக்குள் ஒருவர் அவர் வாழும் இடத்திற்கேற்ற வாழ்க்கை முறையை வகை படுத்தி அதை தருமம் என தீர்மானித்தார். இதை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பல வழிகளில் போதனையாகவும் சொற்பொழிவாகவும் தன் கருத்துக்களை மக்களிடம் கொண்டு பொய் சேர்த்தார்.  நாம் சிந்திக்காத, நமக்கு இது வரை தெரியாத, நமக்கு தேவையான கருத்துக்களை ஒருவர் எடுத்துரைத்ததும் அவரை இறைவனின் படைப்பாக பார்த்தனர். அவரே  தேவ தூதர் என்றும் தேவர் என்றும் கருதப்பட்டார். அவர் கூறிய அறிவியல் கருத்துக்களும் வாழ்க்கை நெறிகளும் மதத்தின் அடிபடையில் மத அறிவுரைகளாக கருதப்பட்டன. அவை மக்கள் வாழ்ந்த அந்த பகுதிகளில் வேகமாக பரவியது. இந்த அறிவியலை பின்பற்றியவர்கள் அனைவரும் அந்த மதத்தை சார்ந்தவர்களாக தீர்மானிகப்படனர். இன்றைக்கு இருக்கும் பைபிள், குரான் மற்றும் வேத நூல்கள் அனைத்தும் மத நூல்களாக பார்க்கப்படுவதற்கு இதுவே காரணம். இவற்றை அறிவியலாக ஆராய்ந்தால் மனித அறிவுக்கு எட்டாத பல அதிசயங்கள் நமக்கு புரியும். கலாச்சாரத்தையும் மதத்தையும் பிரித்துவைத்து பார்க்கும் மனநிலை மக்களுக்குள் மலர வேண்டும். மக்களின் அன்றாட பழக்க வழக்கம் கலாட்சாரத்தின் அடிபடையிலும், நாகரிக முதிர்ச்சியிலும் வந்ததே தவிர அதற்கு மத சாயம் பூசுவது சரி அல்ல.
என்னுடைய இந்த கட்டுரையின் நோக்கம் இறைவன் மீது உள்ள நம்பிக்கையை கெடுப்பதாகவோ குறைப்பதாகவோ
அமையவில்லை என்று நான் நம்புகிறேன். என்னுடைய கருத்து இறைவன் என்று ஒருவன் இருக்கிறான், ஒருவனே இருக்கிறான். ஒரு சக்தி மேல் இருந்து இயங்கச் செய்யாமல் பூமி தன் பாதையில் சுற்றாது, சூரியன் சுடர் விடாது, பிறப்புகளும் இறப்புகளும் இருகாது. நம்மால் முடியாத ஒன்று சாத்தியமில்லாத ஒன்று நம்மை விட வலிமை டைத்த ஒரு சக்தியால் மட்டுமே முடியும், அந்த உருவமில்லா சக்திக்கு பெயர் தான் இறைவன்.
கடைசியாகவும் சுருக்கமாகவும் சொல்ல வேண்டும் என்றால். இறைவனை வணங்குதல் மற்றும் அவன் மீது நம்பிக்கை கொள்ளுதல் மட்டுமே மத கொள்கை. இறைவனை வணங்கும் விதமும் சரி, நமது வாழ்க்கை முறையும் சரி, அது கலாச்சாரம் அல்லது பண்பாடு. இவற்றை வேற்று மதத்தினரிடம் இருந்து கற்றுக்கொள்வதிலும்  தவறில்லை. அதாவது கிருத்துவ ஆலயங்களில் தீபம் ஏற்றுவதிலும் கோவில்களில் மெழுகுவர்த்தி ஏற்றுவதிலும் தவறு ஒன்றும் இல்லை. நம்பிக்கை மட்டும் இருந்தால் போதும். ஒவ்வொரு மதத்திற்கும் உள்ள வேறுபாடு இறைவனின் தோற்றம் மட்டுமே. ஆனால் அனைத்து மதத்தினரும் நம்பும் உண்மை இறைவன் என்பவர் உருவமில்லா ஆத்துமா தான். இறைவன் ஒருவனே என்பது எல்லா மதத்திலும் உள்ள நம்பிக்கை. ஆனால் அதிலும் அந்த ஒருவன் என் இறைவன் தான் என்று கூறி பிரச்சனை செய்தால், மனிதனின் மடமையை குறை கூறுவது தவிர எனக்கு வேறு ஒன்றும் தெரியவில்லை.
இந்த உரையில் உங்களுக்கு உடன்பாடில்லா அல்லது யாரையும்
புண்படுத்தும் கருத்துக்கள் ஏதேனும் இருந்தால் தயவு செய்து மன்னிக்கவும். அது என் நோக்கமல்ல, என் அறியாமையாக கூட இருக்கலாம்.
– சு.யோகேஷ் கார்த்திக்.
Be the first to start a conversation

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: